நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.

இதில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டன.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கேப்ரியல் ஜேசுஸ், கேய் ஹாவர்ட்ஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் அஸ்டன் வில்லா, வெஸ்ட்ஹாம், எவர்ட்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset