நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி ஏமாற்றம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சமநிலை கண்டு ரசிகர்களை ஏமாற்றி உள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் சிப்பீல்டு யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் நியூகாஸ்டல், எவர்ட்டன், டோட்டன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset