நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெங்கி உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். 

இந்நிலையில், 8-ஆவது வாரமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும் முகாம்கள் நடைபெற்றன. 

சென்னை அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடிசாலை, சசி நகரில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மழைக்கால மருத்துவ முகாம்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியும் நடைபெறுகிறது. 

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு உள்ளான பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset