நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் அதிரடி நடவடிக்கையால் சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட 21 பேர் அடுத்தாண்டு ஏப்ரலில் விடுதலை

ஷாஆலம்:

சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட 21 பேர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மஇகாசின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையில் வழக்கறிஞர்கள் குழுவினர் மேற்கொண்ட மற்றொரு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 21 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை மீட்கும் நோக்கில் மஇகா இலவச வழக்கறிஞர் சேவையை வழங்கியது.

மஇகாவில் செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகரன், வழக்கறிஞர் யோகேஸ் உட்பட பல வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் மீதான வழக்கு விசாரணை ஷாஆலாம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கறிஞர் ஹஸ்புல்லா பின் அடாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

கைதான 21 பேருக்கும் 2 ஆண்டுகள் 10 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவர்கள் கைதான தேதியில் இருந்து அவர்களுக்கான சிறைத் தண்டனை கணக்கெடுக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 21 பேரும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்படுவார்கள் என்று வழக்கறிஞர் ராஜசேகரன் கூறினார்.

மஇகா இலவச வழக்கறிஞர்கள் குழுவின் மற்றொரு சாதனை இதுவாகும்.

ஏற்கனவே டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையின் அடிப்படையில் சீ பீல்ட் ஆலயம், விடுதலை புலிகள் விவகாரம், தாய்மொழி பள்ளிகள் ஆகிய விவகாரத்திற்கு இலவச வழக்கறிஞர் சேவை வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset