நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தைக் குறிக்கும் சிறப்பு தபால் தலை வெளியீடு  

கோலாலம்பூர்:

பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இச் சிறப்பு தபால் தலையை போஸ் மலேசியா இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

பாலஸ்தீன கொடிக்கு பின்னால் மக்கள் ஒற்றுமையாக கையோங்கி நிற்பது போன்று இந்த தபால் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு விடுதலை கிடைப்பதுடன் அங்கு நீடித்த அமைதிக்கான மலேசியர்களின் ஆதரவையும் இத் தபால் தலை குறிக்கிறது.

இந்த தபால் தலையில்  முயற்சி வெறும் அடையாளச் செயல் அல்ல. மாறாக சுதந்திரம், அமைதியை அடைவதற்கான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு மலேசியர்களின் ஒற்றுமை, முழு ஆதரவை வாங்குவதைக் குறிக்கிறது.

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் அடக்குமுறையும் கொடுமையும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வருகிறது.

இப்போது அது மேற்குக் கரையில் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு மனிதகுலத்திற்கு எதிரான கொலைகளும் அக்கிரமங்களை எல்லைகளை மீறியுள்ளது.

இன்றை நிலவரப்படி காசாவில்  18,600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

காசாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வன் கொடுமையை மலேசியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

அதே வேளையில் பாலஸ்தீனத்தின் சுதத்திரத்தை குறிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset