செய்திகள் மலேசியா
பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு இந்திய உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கான இந்திய நாட்டின் உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தியா நாட்டின் வெளியுறவு துறை, கல்வி துறையின் இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, குஜராத் மாநில வட்டார தொழிற்துறை அமைச்சர் பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள நுண்கலை மையத்தில் நடைபெற்றது. இந்திய நாட்டின் வெளியுறவு துறை, மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையம் ஆகியவை இந்த கலாச்சார நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்திய நாட்டின் பாரம்பரியங்கள், கலைகள் யாவும் வெளிநாடுகளிலும் பறைசாற்றப்படுவது என்பது இந்தியாவிற்குப் பெரும் பெருமையைத் தேடி தருவதாக அமைவதாக டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இந்த பக்தி மியூசிகல் நிகழ்ச்சியில் பக்திக்கு முதன்மையானவர்களான ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரிய இராமானுஜ ஆச்சாரியார் அகியோர்களின் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
வட இந்தியாவில் இருந்து குரு நாநாக் தேவ், ரவிதாஸ், சுர்தாஸ் சைதன்யா மஹாபிரபு ஆகியோரின் சிறப்புகளும் இதில் அடங்கும். வட மற்றும் தென் இந்தியாவில் இவர்களின் பக்தி பங்களிப்பு என்பது மக்களைப் பக்தி என்னும் வாழ்வியல் முறைக்குக் கொண்டு சென்றது.
கடந்த 1500 வருடங்களாக இருக்கும் பக்தி மார்க்கத்தின் சிறப்பு இந்த இசை கலச்சார நிகழ்வில் கொண்டாடப்பட்டது. மலேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் வந்து இணைந்து இசை கச்சேரிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.
பக்தி மார்க்கத்தின் இசை மற்றும் அது குறித்த வாழ்வியல் முறைகளை மக்கள் நன்கு அறிந்த வேளையில் இந்த நிகழ்ச்சியை அனைவரும் பெரிதாக வரவேற்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm