செய்திகள் மலேசியா
ஜொகூரில் 66 வெளிநாட்டவர்கள் கைது
ஜொகூர் பாரு:
ஜொகூர் குடிநுழைவுத் துறை பொழுதுபோக்கு மையத்தில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 56 பெண்கள் உட்பட மொத்தம் 66 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வாடிக்கையாளர் சேவகர்களாகப் (GRO) பணியாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ‘ஆப்ஸ் கெகார்’ (Ops Gegar) நடவடிக்கையில் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று ஜொகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முஹம்மது ருஸ்டி முகமது டருஸ் கூறினார்.
GRO ஆக பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் பெண்களில் 47 பேர் தாய்லாந்து, 5 பேர் லாவோஸ், 2 பேர் இந்தோனேசியா, ,மீதம் இருவர் முறையே வியட்நாம், சீன நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
பார் சேவகர், சுத்தம் செய்யும் பணியாளர்களாக இருந்த ஆடவர்களில் 5 இந்தியர்கள், 2 வியட்நாமியர்கள்,2 இந்தோனேசியர்கள், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
“சோதனை நேரத்தில், சில வெளிநாட்டவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். எனினும், அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆரம்ப விசாரணையில் அவர்கள் 1959/63 குடியேற்றச் சட்டம், 1963 குடியேற்ற விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது, விசாரணைக்கு உதவ இரண்டு '29’ பாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக செத்தியா ட்ரோபிகா குடியேற்றக் காவல் நிலைய முகாமிற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 11:18 pm
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96% பயனுள்ள நிலையை அடைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
February 11, 2026, 10:44 pm
ரவாங் பெர்டானாவில் ஆலய கட்டிடம் இடிப்பு வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாப்பாராயுடு
February 11, 2026, 10:19 pm
3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது
February 11, 2026, 10:18 pm
ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்
February 11, 2026, 10:17 pm
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி
February 11, 2026, 10:16 pm
குவாந்தானில் பொதுப் போக்குவரத்து சேவையை BAS.MY வலுப்படுத்துகிறது: அந்தோனி லோக்
February 11, 2026, 4:47 pm
அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2026, 4:36 pm
தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
February 11, 2026, 4:35 pm
2.5 பில்லியன் ரிங்கிட் வலுவான மதிப்பீட்டு தரத்துடன் குவாலிடாஸ் சுகுக் நிறுவனம் RAM அங்கீகாரத்தைப் பெற்றது
February 11, 2026, 4:23 pm
