நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் 5 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும்: மெட் மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia), கெடா மாநிலத்தின் ஐந்து பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என்று எச்சரித்துள்ளது.

இந்த வெப்பமான வானிலை நிலை போகோக் சேனா, பெண்டாங், பாலிங், பாடாங் தெராப், கூலிம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக MetMalaysia வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை எட்டியதை அடுத்து, நிலை ஒன்று (எச்சரிக்கை) அறிவிக்கப்படுகிறது,” என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் நிலை இரண்டு என்றும், 40 டிகிரி செல்சியஸை மீறினால் நிலை மூன்று என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

வானிலை தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய பொதுமக்கள் MetMalaysia-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://www.met.gov.my/iklim/status-cuaca-panas என்ற முகவரியை அணுகலாம்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset