செய்திகள் மலேசியா
வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் சட்டத்திற்குக் கீழ்ப்படியுங்கள்; மதப் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்: மாமன்னர்
கோலாலம்பூர்:
வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுன்.
மதப் பிரச்சினைகளை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
நில பயன்பாடு, வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு இணங்க வேண்டும்.
கோயில் கட்டுமான விவகாரத்தில் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சீன ஆலயங்கள் கட்டுவது போன்ற அதே விதிமுறைகள் மற்றும் சட்ட வழிகளின்படி கையாள வேண்டும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜொகூரில் ஒரு கோயில் இடிக்கப்பட்ட பிரச்சினையை நல்ல, விவேகமான, சட்டப்பூர்வ முறையில் தீர்ப்பதில் தாம் சமாதான தூதராக செயல்பட்ட அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
நான் தனிப்பட்ட முறையில் பிரச்சினையை இணக்கமாக தீர்த்து வைத்தேன்.
மேலும் தேவையற்ற விஷயங்களைத் தவிர்க்கவும், பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் எப்போதும் சட்டத்திற்கு இணங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தினேன்.
மனிதர்களிடையே பரஸ்பர மரியாதை என்ற கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மேலும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டைப் பின்பற்றுவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்திற்கு மரியாதை காட்ட வேண்டும்.
வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த, தவறான புரிதல்கள், பதட்டங்கள், ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்க, பரஸ்பர மரியாதையின் இந்த அணுகுமுறை முக்கியமானது என்று மாமன்னர் முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 11:18 pm
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96% பயனுள்ள நிலையை அடைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
February 11, 2026, 10:44 pm
ரவாங் பெர்டானாவில் ஆலய கட்டிடம் இடிப்பு வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாப்பாராயுடு
February 11, 2026, 10:19 pm
3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது
February 11, 2026, 10:18 pm
ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்
February 11, 2026, 10:17 pm
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி
February 11, 2026, 10:16 pm
குவாந்தானில் பொதுப் போக்குவரத்து சேவையை BAS.MY வலுப்படுத்துகிறது: அந்தோனி லோக்
February 11, 2026, 4:47 pm
அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2026, 4:36 pm
தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
February 11, 2026, 4:35 pm
2.5 பில்லியன் ரிங்கிட் வலுவான மதிப்பீட்டு தரத்துடன் குவாலிடாஸ் சுகுக் நிறுவனம் RAM அங்கீகாரத்தைப் பெற்றது
February 11, 2026, 4:23 pm
