நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனுமதி விதிகளை மீறிய மீனவர்கள் ஓப்ஸ் மார்டோஃப் நடவடிக்கையில் பிடிபட்டனர்

கிள்ளான் துறைமுகம்: 

கோலா சிலாங்கூர், செகிஞ்சான் கடற்பரப்புகளில் நடத்திய ஓப்ஸ் மார்டோஃப் கண்காணிப்பு நடவடிக்கையில், சில மீனவர்கள் மீன்பிடி அனுமதி விதிகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின் போது, சிலர் பள்ளிப்படிப்பு இல்லை என்றும், விதிமுறைகள் புரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, செமென்தா கடற்பரப்பில் பதிவு எண் இல்லாத ஒரு படகு பிடிபட்டது. அப்போது அது மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்களை சேகரித்து கொண்டிருந்தது.

ஆய்வில், அந்த நபர் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், செல்லுபடியாகும் மீன்பிடி உரிமம் இல்லாமலும் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிலர் தாங்கள் புதிதாக இந்தத் தொழிலில் சேர்ந்ததாகவும், ஆவணங்களை மறந்துவிட்டதாகவும், படகு வேறு ஒருவருக்குச் சொந்தம் என்றும், துறையின் விதிகள் குறித்து தங்களுக்கு தகவல் தரப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 10 உள்ளூர் மீன்பிடி படகுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

- கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset