நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்

தாப்பா:

தாப்பாவில் உள்ள உயர் கல்விக் கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 280 பேருக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வழங்கினார்.

கல்வியில் சாதிக்க வறுமை ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

இந்த அடிப்படையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டு முதல் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு நான் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறேன்.

ஆரம்ப, இடைநிலை பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தான் இன்று கிட்டத்தட்ட 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்களை, டிப்ளோமா, சான்றிதழ் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

மேலும் எஸ்பிஎம் தேர்வில் ஏ பெற்ற மாணவர்கள், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கும் இன்று உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த உதவிகள் மாணவர்கள் தங்கள் கல்வி மேற்கொள்ள பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset