
செய்திகள் தொழில்நுட்பம்
ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம்
கலிப்போர்னியா :
செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்தாண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டிலுள்ளன.
அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாட் ஜிபிடி-க்கு(ChatGPT) போட்டியாக தனது ‘பார்ட்’ (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது.
பல போட்டிகளுக்கு நடுவில் ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள ‘ஜெமினி’ அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெமினி நானோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இந்தச் செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பெஞ்ச் மார்க்குகளில் (benchmarks) சாட் ஜிபிடி.4-ஐ விஞ்சியிருக்கும் ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எழுத்து (text) வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் கோடு (Code) வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளது.
கேமராவின் முன் ஒரு காகிதத்தில் ஏதேனும் வரைந்தாலோ அல்லது கை அசைவுகள் மூலம் தகவல்கள் தெரிவித்தாலோ, அதனையும் புரிந்துகொண்டு உரையாடல்கள் மேற்கொள்கின்றது ஜெமினி.
‘ஜெமினி நானோ’ தற்போது ‘கூகுள் பார்ட்’ தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm