நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெலங்கானா புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி

புது டெல்லி:

தெலங்கானா புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் 64, பிஆர்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7, இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தை கைப்பற்றின.

இதனால் ஆளும் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். அவர் ஹைதராபாதில் இன்று பதவியேற்கிறார்.

தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றிக்காக இதர தலைவர்களுடன் இணைந்து விரிவாக பிரசாரம் மேற்கொண்ட துடிப்பான தலைவர் ரேவந்த் ரெட்டி என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset