நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் திடல் நிலை மோசமாக உள்ளது; நெட்டிசன்கள் அதிருப்தி 

கோலாலம்பூர்: 

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் திடல் மோசமாக உள்ளது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர்.

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் போடப்பட்டுள்ள ZEON ZOYSIA வகை புற்கள் ஆங்காங்கே மோசமாக காட்சியளிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு பெர்பாடானான் ஸ்டேடியம் மலேசியாவின் தலைவர் ஹான்ஸ் ஐசேக் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மலேசிய கிண்ண இறுதியாட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் திடலை சீர் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக, SNBJ அரங்கின் திடல் மோசமாக உள்ளதாக தெங்கு மஹ்கோத்தா ஜொகூர் TMJ தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தை பதிவேற்றம் செய்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் COLD PLAY இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset