நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெள்ளம் காரணமாகச் சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்படுகிறது

சென்னை :

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகின்றது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை 20 செ.மீ வரை மழை பெய்வதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஓடுதளத்தில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் விமானத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்த சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓடு தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினால்தான் வழக்கமான விமான சேவைகளை இயக்க முடியும். இதனால் இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset