
செய்திகள் இந்தியா
அழிவுப் பாதையில் ரயில்வே: மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புது டெல்லி:
ரயில்வே துறையை மோடி அரசு அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
ரயில்வே துறையின் செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் அவர் வெளியிட்ட பதிவில்,
ஒடிசா மாநிலம் பாலாசோரில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துக்குப் பிறகு, கவச பாதுகாப்பு அம்சம் பரவலாக அறியப்பட்டது.
ஆனால் பாலாசோர் விபத்துக்குப் பிறகு 1 கி.மீ. தூரத்துக்குக்கூட கூடுதலாக பொருத்தப்படவில்லை.
ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக, சாதாரண படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பயணமும் அதிக செலவுடையதாக மாறிவிட்டது.
ரயில்வே துறைக்கென இருந்த தனி நிதிநிலை அறிக்கையை ரத்து செய்ததன் மூலம், பொறுப்பேற்பிலிருந்து மோடி அரசு விலகியுள்ளது. ரயில்களுக்கு கொடியசைத்து, மக்களைக் கவரும் வகையில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் பிரதமர் மோடி மும்மரமாக உள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பு, வசதி உள்ளிட்டவற்றில் எந்தவித கவனத்தையும் பிரதமர் செலுத்தவில்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm