நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்

பெட்டாலிங் ஜெயா:

புதியதாக கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம்  57.3% அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 3,626 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.

48% புதிய சம்பவங்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை உட்படுத்தியதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு வாரம் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.

கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு குறித்து பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset