நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும்  கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர்:

நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை. மலேசிய அரசியலமைப்பால் தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது இனியும் அது குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

இந்நாட்டில் தாய் மொழி பள்ளிகளை களையெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் தாய்மொழி பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று நீதிமன்ற தீர்ப்பு அதிரடி தீர்ப்பாகும்.

ஆகவே தமிழ்ப் பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தமிழ்பள்ளிகளுக்கு மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. முழு உதவி பெற்ற தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கப்பலமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் 25 ஆம் ஆண்டு விருந்தளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset