நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முந்துகிறது 

போபால்: 

மத்தியப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி 124 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் 
கட்சிகள்    முன்னிலை

பாஜக    131
காங்கிரஸ்    94
இதர கட்சிகள்    2

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 

இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. அங்கு கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது. 

அக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஓபிசி பிரிவினரின் நலன் காக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக 4-வது முறையாக ஆட்சியை தொடர்ந்தது. இதனால் மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் உள்கட்சி பூசலும் அதிகரித்து இருந்தது. 

இதேபோன்ற சூழல் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலின்போதும் நிலவியது. இதன் காரணமாக 4-வது முறையாக முதல்வர் வேட்பாளராக்கப்பட்ட சிவராஜ் சிங்குக்கு தோல்வி கிட்டியது. 

கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனினும், அந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா உதவினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த முறையும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது. 

அதேபோல் தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு அக் கட்சி வாய்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், சம பலத்துடன் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset