நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

ஜெருசலேம்: 

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசினர்.

கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டிருந்த போர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

தெற்கு காசா பகுதியில் வசிப்பவர்கள் கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே இடம் பெயர வேண்டும் என்று எச்சரித்து அந்தப் பகுதியில் விமானம் மூலம் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியது.

Where to go?' Palestinians say nowhere safe as Israel resumes Gaza bombing  | Israel-Palestine conflict News | Al Jazeera

அதைத் தொடர்ந்து காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. 

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவம்  200 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset