நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக காற்பந்து தர வரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 130ஆவது இடத்திற்கு முன்னேற்றம் 

கோலாலம்பூர்: 

ஃபிஃபா உலக காற்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 130 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன் ஹரிமாவ் மலாயா 137ஆவது இடத்தில் இருந்த வேளையில் ஏழு இடங்கள் முன்னேறி 130ஆவது இடத்திற்கு வந்துள்ளது. 

கடந்த 2006ஆம் ஆண்டு ஹரிமாவ் மலாயா அணி 124ஆவது இடத்தில் இருந்த வேளையில் 17ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளனர். 

பயிற்றுநர் கிம் பான் கோ தலைமையிலான மலேசியா அணி 2026ஆம் ஆண்டு உலக கிண்ணம், 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண போட்டியில் இரு வெற்றிகளைப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரிமாவ் மலாயா அணி அடுத்ததாக 2023 ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் கலந்துக்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டி கத்தார் நாட்டில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset