நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தல்

பெய்ஜிங்:

சீனாவில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கவும் அதிகமான மருந்தகங்களைத் திறக்கவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறது.

வடக்கு சீனாவில் மக்கள் கடுமையான சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் அந்த வேண்டுகோள் சுகாதார அமைச்சிடம் இருந்து வெளிவந்துள்ளது. 

புதிதாகப் பரவும் கிருமி அதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற அச்சத்தைத் தணிக்கச் சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

ஏற்கனவே தெரியவந்திருக்கும் கிருமிகளின் கலவையே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்துக் கடந்த வாரம் உலகச் சுகாதார நிறுவனம் அது பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டது. 

கடந்த மூவாண்டுகளாகக் COVID-19 காரணமாக மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலைமைக்கு அதுவே காரணம் என்று அவர்களை மேற்கோள்காட்டிச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

பொதுமக்களை முகக்கவசம் அணியும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

பள்ளிகள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset