நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் இரவு விடுதிகள் இனி விடிய விடிய திறந்திருக்கும் 

பேங்காக்:

தாய்லாந்தில் இரவு விடுதிகளையும் கேளிக்கைக் கூடங்களையும் நீண்டநேரம் திறந்துவைக்க அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று தாய்லாந்து நம்புகிறது.

பேங்காக் (Bangkok), புக்கெட் (Phuket), சியாங் மாய் (Chiang Mai), சாமுய் (Samui) போன்ற பிரபலமான சுற்றுலாத்தலங்களில் உள்ள கேளிக்கை இடங்கள், பொழுதுபோக்கு விடுதிகள் அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

இந்தப் புதிய அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று தாய்லாந்துப் பிரதமர் செட்டா தவீசின் (Srettha Thavisin) தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்குச் சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளில் தாய்லந்தின் சுற்றுலாத்துறை மங்கிவிட்டது. அதற்கு எழுச்சியூட்ட தவீசின் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

அதில் ஒன்று சீன நாட்டுப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குச் செல்லலாம் என்று தாய்லந்து இதற்கு முன்னர் அறிவித்தது.

இந்த ஆண்டு (2023) இதுவரை தாய்லாந்துக்கு 24.5 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் சென்றுள்ளனர். ஆண்டு முடிவில் அந்த எண்ணிக்கை 28 மில்லியனாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset