நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலிடம் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது ஹமாஸ்

ஜெருசலேம்: 

கடந்த 47 நாள்களாக நடைபெற்று வரும்  போரில் இஸ்ரேலிடம் கைதிகள் பரிமாற்றம் செய்தது ஹமாஸ்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலியர் 13 பேர்,  தாய்லாந்தினர் 10 பேர், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தனர். 

இதற்கு பதிலாக இஸ்ரேல் 39 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.

4 நாள்கள் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே கடந்த புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டன.

இதன் படி தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் படையினரும், அதற்கு ஈடாக தம்மிடம் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset