நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

சென்னை: 

தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்கள் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 26-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று (நவம்பர் 23) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ., நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 24 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 17 செ.மீ.

கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset