நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது வட கொரியா

சியோல்:

ராணுவ உளவு செயற்கைக்கோள் மலிங்யாங்1 2 முறை தோல்விக்கு பிறகு வட கொரியா வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை இரவு ஏவியது.

செவ்வாய்க்கிழமை இரவு உளவு ஏவுகணையான மலிங்யாங்1 ஏவியதாகவும், அது புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உளவு செயற்கைக்கோளைச் செலுத்தியதாக வடகொரியா தெரிவித்து வருகிறது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தைக் கைவிடச் செய்யுமாறு தனது நாட்டு அதிகாரிகளுக்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளார்.

எந்தவிதமான செயற்கைக்கோள் சோதனையையும் வடகொரியா நடத்தக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் மாறுபட்ட சோதனை வடிவமாக செயற்கைக்கோள் சோதனையை வடகொரியா கருதுவதால் இந்தத் தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது.

தங்கள் நாட்டைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக வடகொரியா உளவு செயற்கைக்கோள் சோதனையை நடத்த திட்டமிடுகிறது என தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset