நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெலுங்கானாவில் பொது சிவில் சட்டம், ராமர் கோயிலுக்கு இலவச தரிசனம்: பாஜக வாக்குறுதி

ஹைதராபாத்:

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், அயோத்தி ராமர்  கோயிலுக்கு இலவசாக தரிசனம் செய்ய அழைத்து செல்லப்படுவர் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

தெலுங்கானா பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் அமித் ஷா வெளியிட்டார்.

அதில், தெலங்கானாவில் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள மத ரீதியிலான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினப் பிரிவினர், பழங்குடியினரின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

தற்போதைய பாரத ராஷ்டிர சமிதி அரசின் அனைத்து ஊழல்களையும் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இம்மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset