
செய்திகள் மலேசியா
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள்
கோலால்ம்பூர்:
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் வணிகக் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் கூறினார்.
மைஏர்லைன்ஸ் இணை நிறுவனருடன் தொடர்புடையை ஐ-சேர்வ் பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது போலீஸ் புகாரை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 10 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
இது நிதி மற்றும் கணக்குகளை கண்டுபிடிப்பதை உள்ளடக்கியது. விரிவான நிதி தடயவியல் ஆய்வும் நடத்தப்படும், என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்