
செய்திகள் மலேசியா
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அறம் செய் தீபாவளி 2023
ஜித்ரா :
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் பிரதிநிதி மன்றம் "அறம் செய் தீபாவளி" நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சி இம்மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகச்சி உள்ளூர் சமூகம், B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்கள், ஏழை குழந்தைகளுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு அமைப்பாளர்கள் சமூகம் பல்வேறு பிரிவுகளுக்கு உதவிக்கரம் நீட்டினர். அவர்கள் 15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக உணவு கூடைகள், நன்கொடைகளை வழங்கியதோடு அவர்களுக்காகத் தீபாவளி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்களுக்கு 2000 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
மேலும், ஜித்ராவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க 500 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்வின் தன்னார்வலர்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மீதான மரியாதையைச் சுட்டிக்காட்டி, கோயில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அறம் செய் தீபாவளி நிகழ்ச்சி சமூகம், ஒற்றுமை, கருணை ஆகியவற்றின் சக்திக்குச் சான்றாக நிற்கின்றது.
- அஸ்வினி செந்தாமரை