நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிறந்தநாளின்று 

நான் கவிஞனாக இல்லாமல்
வேறு யாராகவும் இருக்க முடியாது”

- இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

அவருக்கு இன்று பிறந்த நாள். ‘மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ, ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார். கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் மனம்கவரப்பட்ட அப்துல் ரகுமான், மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளையும் விரும்பிப் படித்தார்.

எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர்வரை சென்று ஆழக் கற்பதைத் தன்னுடைய இயல்பாகக் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்; சமஸ்கிருதமும் கற்றறிந்தார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’பால்வீதி’ கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு புதுமை செய்தார். மேலும், ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். 'மின்மினிகளால் ஒரு கடிதம்' என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

’நேயர் விருப்பம்’, ’ஆலாபனை’, ’இறந்ததால் பிறந்தவன்’, ’கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை’, ’பித்தன்’, ’தேவகானம்’, ’பறவையின் பாதை’, ’பாலைநிலா’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், 'பூப்படைந்த சப்தம்', 'தொலைபேசி கண்ணீர்', 'காற்று என் மனைவி', 'உறங்கும் அழகி', 'நெருப்பை அணைக்கும் நெருப்பு' உள்ளிட்ட பல கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய ‘ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை. இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், "கவிதையே கரை காணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம்.

எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக்கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்” எனப் பதிலளித்தார்.

கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை. இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், "கவிதையே கரை காணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம்.

எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக்கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்” எனப் பதிலளித்தார்.

அவரின் படைப்புகளில் ஒன்றே இன்று இதோ:

‘கொடுக்கிறேன்’ என்கிற ஒரு கவிதையில்,

”கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!

கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்

உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்

உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை

உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே”

- என உண்மையின் ரகசியங்களை உலகுக்கு உணர்த்தி இருப்பார்.

அப்பேர்ப்பட்டவரின் பிறந்த நாள் இன்று.

- டாக்டர் ராஜாமணி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset