நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் - வருண் சந்திப்பு

புது டெல்லி:

பாஜக எம்.பி.யும், சித்தப்பாவின் மகனுமான வருண் காந்தியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேதர்நாத் கோயிலில் சந்தித்துப் பேசினர்.

உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் உள்ள சிவன் கோயிலில் ராகுல் 3 நாள்களாக வழிபாடு நடத்தி வருகிறார்.

கேதார்நாத் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த வருண் காந்தி, ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

பாஜக எம்.பி.யான வருண் காந்தி கடந்த சில மாதங்களாக அக் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதில்லை.

விவசாயிகள் பிரச்சனை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் பாஜக கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தியுடனான வருண் காந்தியின் சந்திப்பு, அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset