நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரஷ்மிகா மந்தனாவின் மார்ஃபிங் காணொலி: புகார் அளித்த 24 மணி நேரத்தில் விடியோவை நீக்க உத்தரவு

புது டெல்லி: 

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் எனப்படும் போலி விடியோ இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப விதியின் கீழ் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் விடியோவை வைத்து ரஷ்மிகாவின் முகத்துடன்  போலியாக அந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவலை தெரிவித்த நடிகை ரஷ்மிகா, சமூக ஊடகத்தில் போலி காணொலி பரவுவது மன வலியை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற அடையாளத் திருட்டால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன், ஒரு சமூகமாக இச் செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தச் சூழலில், போலி காணொலியை நீக்க சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

புகார் அளித்த 24 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் விடியோவை நீக்கவில்லை என்றால் 1 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset