நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

முஸ்லிம்களாக இருந்தால் போதாது! அன்ஸார்களாகவும் திகழவேண்டும்! - வெள்ளிச் சிந்தனை

நபி (ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்கள் ஒரு போர்வையை போர்த்தியவாறு வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். 

அப்போது தங்களது தலையில் கருப்புக்கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள். மிம்பர் - மேடை மீதமர்ந்து அல்லாஹ் வைப் புகழ்ந்து, அவனது பண்புகளை எடுத்துரைத்த பிறகு, 

'வரும் காலத்தில் இஸ்லாமில் இணையும் மக்கள், எண்ணிக்கையில் அதிகமாவார்கள். ஆனால், இறை மார்க்கத்திற்கு உதவிபுரியும் அன்சார் - உதவியாளர்கள் குறைந்து போய்விடுவார்கள். 

எந்த அளவிற்கென்றால்...? உணவில் உப்பிருக்கும் அளவில்தான் உதவுபவர்கள் மக்களிடையே இருப்பார்கள். 

உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவருக்கு நன்மையும் விளைவிக்கும் ஓர் அதிகாரம் எதையும் பெற்றால், 

நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்று, தீமை செய்பவரை மன்னித்துவிடட்டும்!' என்று கூறினார்கள். 

அதுதான் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்த இறுதி அவையாக இருந்தது. [இப்னு அப்பாஸ் (ரளி), ஸஹீஹ் புகாரி : 3628] 

எவ்வளவு நிதர்சனமான, தீர்க்க தரிசனமான உண்மை!
அன்ஸார்கள் உருவான அறபக மண்ணே ஃபலஸ்தீன மண்ணுக்கு உதவ முன்வராத போது, ஃபலஸ்தீன சிறுவன் இப்படி சொன்னதில் என்ன குற்றம் இருக்கமுடியும்?

மனதை உருக்கும் அந்தக் கவிதை இது தான்:

அரபு நாடுகளிடம்

சொல்லுங்கள்

அவர்கள்

எங்களுக்காக 

ஜனஸா தொழ வேண்டாம்!

நாங்கள் ஷஹீத்கள்

உயிரோடு இருக்கின்றோம்!

ஆனால்,

நீங்கள்தான்

இறந்துவிட்டீர்கள்!

துருக்கி தொலைக்காட்சியில் பாலஸ்தீன சிறுவனின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

- ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரி

தொடர்புடைய செய்திகள்

+ - reset