செய்திகள் சிந்தனைகள்
என் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; உடல் ஆரோக்கியத்தைத் தாருங்கள்; அந்தப் பெண்ணின் கதறல் நமக்கு சொல்வதென்ன? - வெள்ளிச் சிந்தனை
இது ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஒரு பெண் இரண்டு பெரிய பணப் பைகளை சுமந்தவாறு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து,
"என்னிடம் இருக்கும் மொத்தப் பணமும் இவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டு எனக்கு நிவாரணம் வழங்குங்கள்'' என்று வேண்டினார்.
அதற்கு மருத்துவர், "இதுபோன்ற நூறு பைகளைக் கொண்டுவந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இறுதிக் கட்டத்தில் இருக்கிறீர்கள்'' என்றார்.
ஆம். அந்தப் பெண்மணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தார்.
மருத்துவரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நோயாளி, மருத்துவமனையின் நடைபாதையில் பணத்தை வீசத் தொடங்கினாள்.
"இதோ என் பணம். யார் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பகரமாக எனக்கு ஆரோக்கியத்தை தாருங்கள். நிவாரணம் தாருங்கள். இந்த முழுப் பணத்தையும் எடுத்துக்கொண்டு உடல்நடலத்தை எனக்கு விற்பவர் யார்?'' என்று மருத்துவமனை வாசலில் நின்றவாறு அந்தப் பெண் உரத்த சப்தத்தில் கதறி அழுதாள்.
இப்போது... இந்த விநாடி... ஓரளவு உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றீர்களா? உடனே இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஆரோக்கியத்துக்கு இணையாக எதுவும் இல்லை. அதற்காக ஆயிரம் முறை அல்லாஹ்வுக்கு நன்றி சொலுத்தினாலும் போதுமாகாது.
உடல் நலம் உங்களை கைவிடும்போதுதான் வாழ்வில் உண்மையான வலியை உணர்வீர்கள். உடல் நமக்குச் செய்த பெரும் துரோகம் அப்போதுதான் புரியவரும்.
நபி (ஸல்) கூறினார்கள்:
"மனிதர்களில் பெரும்பாலோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் இழப்புக்குஉள்ளாகிவிடுகின்றனர்:
1. ஆரோக்கியம். 2. ஓய்வு''. (புகாரி)
(அஷ்ஷெய்க் தாரிக் அஸ்ஸுவைதான் அவர்களுடைய முகநூல் பதிவு)
- நூஹ் மஹ்ளரி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
