செய்திகள் சிந்தனைகள்
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
கூட்டமைப்பைக் குலைத்து, தொடர்புகளைத் துண்டித்து, இல்லற வாழ்வை நாசம் செய்து, தம்பதியரைப் பிரித்து, நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம்.
எவ்வளவு உபதேசங்கள் கேட்டாலும் சிலர் புறம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சபையில் குறிப்பிட்ட ஒருவர் இல்லாதபோது அவரைக் குறித்து நல்ல விஷயங்கள் பேசப்படுகின்றன என்றால், அவற்றை அவர் காதுக்குக் கொண்டு செல்வோர் குறைவாகவே இருப்பார்கள்.
அதேவேளை அவரைக் குறித்து புறம் பேசப்படுகிறது என்றால், மின்னல் வேகத்தில் அவர் காதுகளுக்கு அது கொண்டு செல்லப்படும். மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.
தொற்று நோயைவிட வேகமாகப் பரவும் அபார ஆற்றல் பெற்றது புறம். அதுவும் இந்த வலைத்தள யுகத்தில் சொல்லவே வேண்டாம். கண்ணிமை நேரத்தில் அனைத்தும் கடத்தப்படுகின்றன.
புறம் விஷயத்தில் எதிரிகளைவிட நண்பர்கள் வேஷத்தில் இருக்கும் துரோகிகள்தான் ஆபத்தானவர்கள். காரணம் தெரியுமா?
ஒருவர் நம்மைக் குறித்து புறம் பேசியிருப்பார். அது நமக்குத் தெரிந்திருக்காது. ஆனால் உடனே இவர் அதை எடுத்துக்கொண்டு நம்மிடம் வந்து,
"உங்களைக் குறித்து இன்ன நபர் இப்படிச் சொல்கிறாரே'' என்பார். அல்லது அதை நமக்கு ஃபார்வேர்ட் செய்வார்.
எதிரி என்னை நோக்கி எய்த அம்பு என் மீது பாயவும் இல்லை, என்னைக் குத்தவும் இல்லை, கீழே விழுந்துவிட்டது. ஆனால் அந்த நண்பரோ அதை எடுத்து வந்து என் நெஞ்சில் மிகச் சரியாகக் குத்திவிட்டு செல்கிறார்.
பலரும் இந்த வேலையை இன்று செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்.
இதனால்.. புறம் பேசுபவன் வீட்டுக்கு வந்தால் அவனுடைய முகத்துக்கு நேராகவே நமது முன்னோர்கள் வாசல் கதவை அறைந்து சாத்திவிடுவார்கள்.
ஏனெனில், அவன் ஷைத்தானுடைய தூதுவன்.
வஹ்ப் இப்னு முனப்பிஹ் அவர்களிடம் ஃபள்ல் இப்னு அய்யாஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒருவர், "உங்களைக் குறித்து இன்ன நபர் மோசமாகப் பேசுவதை நான் கேட்டேன்'' என்றார்.
அதற்கு வஹப் கூறிய பதில் ஆச்சரியமானது. அவர் சொன்னார்: "ஷைத்தானுக்கு உன்னைத் தவிர வேறெந்த தூதுவனும் கிடைக்கவில்லையா?''
ஆம் புறம் பேசுவது ஷைத்தானியச் செயல் என்றால், பேசப்பட்ட புறத்தை சம்பந்தப்பட்ட நபருக்குக் கடத்துவது ஷைத்தானுடைய தூதுவர் செய்யும் செயல்.
அல்லாஹ் கூறுகின்றான்:
"அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் திட்டுகின்றவனாகவும், புறம் பேசித் திரிபவனாகவும் இருக்கிறான்.'' (68:10,11)
- நூஹ் மஹ்ளரி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
