நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கோடாக் என்றொரு நிறுவனம் இருந்தது தெரியுமா? அந்த நிறுவனம் எப்படி திவால் ஆனது? - வெள்ளிச் சிந்தனை

கோடாக் என்றொரு நிறுவனம் இருந்தது தெரியுமா? அந்த நிறுவனம் எப்படி திவால் ஆனது எனும் கதையை அச்சிட்டு மேஜை மீது தொங்கவிட்டு தினமும் படிக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஏன் தெரியுமா..?

கோடாக் நிறுவனம் 133 ஆண்டுகளாக கேமரா துறையின் உச்சத்தில் இருந்தது.

அமெரிக்காவின் 90%க்கும் அதிகமான கேமரா சந்தையை இந்த நிறுவனம்தான் 133 வருடங்களாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அவ்வாறெனில் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால் 2012-ஆம் ஆண்டு தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அது அறிவித்தது. காரணம் என்ன? டிஜிட்டல் துறையின் வருகை.

1975-ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராவின் யோசனையை அந்த நிறுவனத்துக்கு ஒரு பொறியாளர் வழங்கினார்.

ஆனால் அந்த நிறுவனமோ அவரை ஏளனம் செய்து புறக்கணித்தது. தமது உற்பத்தியைத் தவிர வேறெதையும் உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்டது.

விளைவு 2012-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் முழுமையாக திவாலானது. இன்று அப்படியொரு நிறுவனமே சந்தையில் இல்லை.

அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கிய ஒரு நிறுவனம் ஏன் ஓரங்கட்டப்பட்டது?

விடை எளிது. உங்களை நிலைநிறுத்த வேண்டும் எனில்; உங்கள் துறையில் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இல்லையேல்... நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். ஓரங்கட்டப்படுவீர்கள். பரணில் கிடக்கும் பழைய பொருட்களைப் போன்று கவனிப்பாரற்று வீசப்படுவீர்கள்.
கோடாக் நிறுவனத்தைப் போன்று திவாலாகிவிடுவீர்கள்.

"யாருடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதோ அவர் தோல்வியடைந்தவர்'' என்று ஹஸனுல் பஸரி (ரஹ்) கூறுகின்றார்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset