நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை

மனிதவாழ்வைச் சீர்குலைக்கும் பெருந்தீமைகள் அனைத்தையும் இஸ்லாமிய வாழ்வியல் ஹராம் எனத் தடுத்துள்ளது.

 நாளிதழ்களை வாசிக்கும்போது நீங்களும் இதை உணர்ந்திருக்கலாம்.

எ.கா.1
“சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை.” 

இந்தச் செய்தி வராத நாளே இல்லை.

சூதாட்டம் இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் ஆகும்.

எ.கா.2
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் குடும்பமே தற்கொலை

இதுவும் அன்றாடச் செய்திதான்.

இஸ்லாத்தில் வட்டி மிகக் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள பாவம் ஆகும்.

வட்டி வாங்குபவர்கள்  இறைவனுடன் போர் புரிபவர்கள் எனும் அளவுக்கு இதை இறுதிவேதம் குர்ஆன் கண்டித்துள்ளது.

எ.கா.3
மதுவினால் நாள்தோறும் பாதிக்கப்படும் குடும்பங்கள், சண்டை சச்சரவுகள், அடிதடி, கொலைகளுக்குக் குறைவே இல்லை.

இதுவும்- அதாவது மதுவும் மார்க்கத்தில் ஹராம் ஆகும்.

அருந்துவது மட்டுமல்ல,

விற்பது, வாங்குவது, அன்பளிப்பாக வழங்குவது என மது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஹராம்தான்.

எ.கா.4
கொலை.

இந்தச் செய்தி வராத நாளிதழ் ஏது?

அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது மனிதகுலம் முழுவதையும் கொல்வது போல் என்று கூறி, நியாயமற்றுக் கொலை செய்வதை மார்க்கம் தடுத்துள்ளது.

எ.கா.5
தற்கொலை.

அம்மா திட்டியதால் தற்கொலை...

தேர்வில் தோல்வி...தற்கொலை...

தோல்வி பயம் தற்கொலை...

வறுமை,பட்டினி தற்கொலை...

சிக்கல்களை எதிர்கொள்ளத் திராணியின்றித் தற்கொலை.

தற்கொலை மார்க்கத்தில் ஹராம் ஆகும்.

இதற்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் குறித்து ஒருவர் அறிந்திருந்தால் தற்கொலை எண்ணமே அவர் இதயத்தில் தோன்றாது.

எ.கா.5
விபச்சாரம்.

சமுதாயத்தைச் சீரழிக்கும் பெரும் பாவங்களில் ஒன்று.

அதைச் செய்யாதீர்கள் என்றல்ல,அதன் அருகில்கூட நெருங்காதீர்கள் என்று மார்க்கம் ஆணையிட்டுள்ளது.

இப்படி மனிதவாழ்வைச் சீரழிக்கும் செயல்களைப் பெரும் பாவங்கள் என்று கூறி மார்க்கம் தடுத்துள்ளது.

அதே நேரத்தில்  மனித இனத்திற்குப் பயன் அளிக்கும் அத்தனையையும் ‘ஹலால்’ ஆக்கியுள்ளது இஸ்லாம்.

யாரேனும் ஓர் அறிவியலாளர் அல்லது ஆன்மிகத் தலைவர் அல்லது சீர்திருத்தவாதி  “இது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கக்கூடியது” என்று ஒரு கருத்தை முன்வைப்பாரேயானால்--

 அது ஏற்கெனவே இஸ்லாத்தில்- ஹலால்  ஆன, வலியுறுத்தப்பட்ட செயலாகவே இருக்கும்.

சிறிய எடுத்துக்காட்டு.
பெண்களின் மறுமணம்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் மறுமணம் செய்துகொள்வது புரட்சிகரமான செயலாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இஸ்லாம் பதினைந்து நூற்றாண்டுக்கு முன்பே போகிற போக்கில் இது போன்ற   புரட்சிகளைச் செய்துகாட்டிவிட்டது.

இஸ்லாம் ஈடிணையற்ற ஓர் இறைநெறி.

அது கூறும் ஹலால்- ஹராம்களை ஒருவர் பேணி வாழ்ந்தால் இம்மையிலும் நிம்மதி. மறுமையிலும் வெற்றி.

சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset