நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தாஜ்மஹால் வரலாற்றை மாற்ற கோரி வழக்கு

புது டெல்லி:

வரலாற்று பாடப் புத்தகங்களில் தாஜ்மஹால் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் தொல்பொருள் ஆய்வுத் துறை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

முகலாயப் பேரரசர் ஷாஹஜான், தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றும் ராஜா மான்சிங்கின் அரண்மனையை அவர் மாற்றி அமைத்ததாகவும் ஹிந்து சேனா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் எடுத்துரைப்பதாகக் கூறிய பின் அவர் உச்ச நீதிமன்றத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றார்' என்றனர்.

இது தொடர்பாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் அத் துறை இதுவரை பதிலளிக்கவில்லை' என்று மனுதாரரின் வழக்குரைஞர் கூறினார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset