நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தலுத்து முன்பு சத்தீஸ்கர் முதல்வர் மீது ரூ.508 கோடிக்கு குற்றச்சாட்டு

புது டெல்லி:

சத்தீஸ்கரில் சில தினங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சூதாட்டச் செயலியான மகாதேவின் உரிமையாளர்களிடம் இருந்து மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பெற்றதாக அமலாக்கத் துறை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.  

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அசிம் தாஸ் என்ற இடைத்தரகர், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் கைது செய்யப்பட்டதாகவும், அவர் கொடுத்த தகவலின் பேரில் தேர்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் தலைவர்களின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், அமலாக்கத் துறை என்ற கடைசி அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளார் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset