நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சட்டப் போராட்டம் நடத்தி மீண்டும் எம்பியானார் முஹம்மது ஃபைசல்

புது டெல்லி:

எம்பி பதவி பறிக்கப்பட்ட லட்சத்தீவு எம்.பி. முஹம்மது ஃபைசல் சட்டப் போராட்டம் நடத்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றுள்ளார்.

மக்களவைச் செயலர் உத்பல் குமார் சிங் ழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், "நீதித்துறை தீர்ப்புகளுக்கு உள்பட்டு ஃபைசலின் தகுதிநீக்கம் ரத்து செய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பேரில், தொடர்ந்து இரண்டு முறை அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது.

கொலை முயற்சி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசலுக்கு கடந்த ஜனவரியில் விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் மீண்டும் எம்.பி.யானார்.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டு கேரள உயர் நீதிமன்றத்தை மீண்டும் விசாரிக்க கூறியது.

கேரள நீதிமன்றம் மீண்டும் ஃபைசலுக்கு தண்டனையை உறுதி செய்தது. மீண்டும் இரண்டாவது முறையாக அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஃபைசல் மீண்டும் தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனுவை விசாரித்து அவரது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதனால் ஃபைசலுக்கு இரண்டாவது முறையாக எம்பி பதவி அளிக்கப்பட்டது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset