நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தலைநகர் டில்லியில் மோசமடையும் காற்றுத் தூய்மைக்கேடு

புதுடில்லி: 

இந்திய நாட்டின் தலைநகரமான புதுடில்லியில் காற்றின் தரம் மோசமான சூழலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், புதுடில்லியில் உள்ள சில பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

வெள்ளை புகையாக காட்சியளிக்கும் சாலையெங்கும் மக்கள் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது. சுமார் 20 மில்லியன் மக்கள் காற்று தூய்மைக்கேடு காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கண் அரிப்பு, தொண்டை கறகறப்பு ஆகிய சுகாதார பிரச்சனைகளும் அதிகளவில் மக்களை வாட்டிவதைக்கிறது. காற்றின் தர குறியீடு 400 ஐ கடந்துள்ளதால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக புதுடில்லி மாநில நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset