செய்திகள் சிந்தனைகள்
பயப்படுவோம் அவனுக்கு! பயப்படும் எல்லாம் நமக்கு! - வெள்ளிச் சிந்தனை
தவறு செய்து விடுவோமோ என்ற பயம்தான் பெரிய தவறு என்பான் புத்திசாலி.
- சாணக்யன்.
மனித வாழ்வில் மிகப் பெரிய பிரச்சினை எது தெரியுமா? வீண் பயம்தான்.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி.
உண்மையில் துயரம் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அது குறித்த பயமே மனதைக் கலக்கி, அறிவைக் குழப்பி நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது. தவறு நேர்வ தால் பயம் இல்லை. தவறு நேர்ந்து விடுமோ என பயந்து பின்வாங்குவதுதான் இழிவு.
எல்லோர் மனதுக்குள்ளும் இருக்கிறது ஆயிரம் பயங்கள். அவற்றை அகற்றி துணிந்து செயல்படுபவனே இறுதியில் வெற்றிபெறுவான்.
என்ன நடந்துவிடுமோ என்று பயந்து பின்வாங்குவதை விட, என்னதான் நடக்கட்டும் என மோதிப் பாருங்கள்! எழுந்தால் வெற்றி. விழுந்தால் அனுபவம்.
பொதுவாக உருவத்தில் பெரிய யானையைக் கண்டு பயப் படுவதுதான் வழக்கம். ஆனால், சாதாரண ஒரு பூனை குறுக்கே செல்வதைக் கண்டு பயப்படுவதுதான் பெரிய ஆச்சரியம்.
பயத்தை விட கொடிய வைரஸ் எதுவுமில்லை. தைரியத்தை விட பெரிய தடுப்பூசி எதுவுமில்லை.
இருட்டில் வாழ்ந்து பழகியவனுக்கு வெளிச்சத்தைக் கண் டாலும் பயம். ஏன், தனது நிழலைக் கண்டாலும் பயம்தான்.
பயம் நிறைந்த எண்ணங்கள் நமது எதிர்காலத்தை முடக்கிவிடும். பயமற்ற எண்ணங்களே நம்மைத் தொடர்ந்து செயல்பட வைக்கும். பயம் நம்மைக் கொன்று விடும். அச்சம் நம்மைத் தின்றுவிடும்.
முயற்சியைத் தொடங்கும்போதே பயத்தைக் கொன்று விடுங்கள். இல்லை என்றால், பயம் நமது முயற்சியைக் கொன்றுவிடும். முடிவைப் பற்றி பயம் கொள்ளாதீங்க! முதலில் முயற்சி செய்யுங்க. முடிவு எதுவாக இருந்தாலும் சரி!
கடந்த காலத்தை நினைக்காதீங்க. கண்ணீர்தான் வரும். எதிர்காலத்தை எதிர்பார்க்காதீங்க. பயம்தான் ஏற்படும். இந்த நிமிடம்...இந்த நொடிதான் உண்மை. அதை முறை யாக அனுபவியுங்க.
வெற்றி என்பது கோட்டைக் கடப்பதல்ல.
நமது மனதில் உள்ள பயத்தைக் கடப்பதே.
விழுவதற்குப் பயந்து விதை விழாவிட்டால்,
விருட்சத்தின் கனியை விரும்பி ருசிக்கமுடியாது.
நமது பயம் எதிரிக்குத் தைரியம். நமது அமைதி எதிரிக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் ஒருபோதும் ஜெயிப் பதில்லை. அஞ்சி தொடை நடுங்கிக் கொண்டிருப்பவ னால் ஆகச் சிறிய குட்டையைக் கூட கடக்கமுடியாது.
தோற்று எதிரியின் முன் மண்டியிடும் நிலை வந்தால்கூட, உங்கள் பயத்தை வெளிக்காட்டாதீங்க! ஏனெனில், எதிரி அடைந்த வெற்றியைவிட உங்கள் முகம் காட்டும் பயம் தான் அவனை அதிக ஆனந்தம் கொள்ளச்செய்கிறது.
பயந்தால் கிடைக்காது பலம். பயப்படாமல்
துணிந்து செல்லங்க...கிடைக்கும் இறை வரம்.
நம்பிக்கை எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால்,
பயம் எனும் நிழல் நமக்குப் பின்னால் போய்விடும்.
ஆபத்து வரும் முன் பயந்தால் அது முன்னெச்சரிக்கை.
ஆபத்து வந்த பிறகு பயந்தாலோ அது கோழைத்தனம்.
நமது பயம்தான் நம்மை அடிமையாக்குகிறது. பயமற்ற வன் யாருக்கும் பயப்படவும் மாட்டான். யாரையும் தனக்கு பயப்படுமாறு செய்யவும் மாட்டான்.
இறுதியாக ஒரு செய்தி :
பயம் ஓர் அருமருந்து. அளவோடு இருந்தால் அது வாழ்வை வளமாக்கும். அளவுக்கு மீறினால் விஷமாகி வாழ்வை அழிக்கும். பயம் சில சமயம் மிக அவசியமானது தான். ஆனா... அநாவசிய பயம் மட்டும்தான் அவசிய மற்றது.
இன்னொரு மிக முக்கியமான
மிக மிக முக்கியமான ஒரு செய்தி :
ஒருவன் படைத்த இறைவனுக்கு பயந்து நடந்தால், உலகில் அனைவரும் அனைத்துமே அவனுக்கு பயப்படும். மாறாக, அவன் இறைவனுக்கு பயந்து நடக்காவிட்டால், உலகில் உள்ள அனைவருக்கும் அனைத்துக்கும் அவன் பயப்பட வேண்டியது வரும். - இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்)
எது நமக்கு சவுகரியம்?
நாமே முடிவு பண்ணிக் கொள்ளலாம்.
- கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ.
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am