
செய்திகள் வணிகம்
பயனர்களுக்கு இரண்டு புதிய சந்தா முறைகள் அறிமுகம்
மென்லோ பார்க் :
எக்ஸ் வலைதளத்தில் பிரீமியம் பிளஸ், பேசிக் என இரண்டு புதிய சந்தா முறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் பிரீமியம் பிளஸ் சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அறிவிப்பின் மூலம் எக்ஸ் தளத்தில் பயனர்கள் தற்போது மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய எக்ஸ் பேசிக் சந்தாவின் விலை மாதம் 13.90 வெள்ளி என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சந்தாவில் விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இத்துடன் பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது, எஸ்.எம்.எஸ். கஸ்டமமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதில் கிரியேட்டர் அம்சங்கள் மற்றும் டிக் மார் உள்ளிட்டவை வழங்கப்படாது. ஏற்கனவே உள்ள பிரீமியம் சந்தா விலை மாதம் 37.31 வெள்ளியாகும்.
இதில் அனைத்து விதமான பிரீமியம் மற்றும் கிரியேட்டர் அம்சங்கள், குறைந்த விளம்பரங்கள் வழங்கப்படும்.
விளம்பரங்கள் தேவையில்லை எனில், மாதம் 74.42 செலுத்தி பிரீமியம் பிளஸ் சந்தாவை பெற்றுக் கொள்ளலாம்.
புதுவித சந்தா முறைகளில் பிரீமியம் பிளஸ், பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 1, 2023, 11:18 am
பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம்
November 24, 2023, 4:41 pm
மலேசியாவின் ஹலால் தொழிற்துறையின் மகத்துவம்: துருக்கியில் வெளிப்படும்
November 23, 2023, 7:43 pm
துபாயிலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்கியது
November 23, 2023, 7:20 pm
தங்கம் ஓர் ஆடம்பர பொருள் என்பதற்கான தெளிவான விளக்கம் தேவை: டத்தோ அப்துல் ரசூல்
November 9, 2023, 4:52 pm
ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம்: மலேசியா - இந்தியா முடிவு: ஜம்ரி அப்துல் காதர்
November 5, 2023, 6:03 pm
நியாயமான விலையில் தரமான உணவு போஸ் கறி ஹவுஸ் இலக்கு: கார்த்திகேசன் முருகையா
November 1, 2023, 6:14 pm
ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டம் இல்லை
October 28, 2023, 10:44 pm
இந்தியாவிலேயே ஐஃபோன் தயாரிக்கிறது டாடா
October 25, 2023, 6:15 pm