நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபோ அம்பாங்கில் இன்று பிரதமருடன் தீபாவளி கலை விழா

கோலாலம்பூர்:

லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று  சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு மேல் பிரதமருடன் தீபாவளி இன்னிசை விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் - துணை தலைவர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் தலைமையில் 14ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த கலை விழாவில் மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து புகழ்பெற்ற பாடகர் வேல் முருகன், பாடகி  கவிதா ஆகியோர் விறுவிறுப்பான பாடல்களை பாடி கலக்க வருகிறார்கள்.

தமிழக கலைஞர்களுக்கு ஈடாக மலேசிய கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நாளை நட்சத்திர கலை விழாவை முன்னிட்டு லேபோ அம்பாங் சாலை மூடப்படுகிறது.

இந்த கலை விழாவில் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்படுவதாக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset