நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்; நாங்கள் இழந்தது போதும்: முஹம்மது அப்பாஸ்

கெய்ரோ:

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகள், ஐரோப்பிய கவுன்சில், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் பேசிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், "பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களைவிட்டு எப்போதும் வெளியேற மாட்டார்கள்; நாங்கள் இழந்தது போதும்' என்று மிக உருக்கமாக பேசினார்.

எகிப்து அதிபர் எல் சிசி பேசுகையில், பாலஸ்தீனர்களை வீடுகளைவிட்டு விரட்டி அவர்களின் தனி நாடு கனவை முறியடிக்க முடியாது என்றார்.

Cairo Peace Summit ends without Gaza breakthrough | Reuters

இராக் பிரதமர் முஹம்மது ஷியா அல் சுடானி, "காசா மக்களை விரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலஸ்தீனர்களுக்கு தங்கள் சொந்த நிலம் தவிர வேறு நாடு இல்லை. உடனடியாக போரை நிறுத்தி சிறைக் கைதிகளை இரு நாடுகளும் விடுவிக்க வேண்டும்" என்றார்.
துருக்கி, ஜோர்டான் நாட்டு அதிபர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் காசா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தின.

ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு ஒட்டுமொத்த தண்டனை வழங்குவது நியாமானதால் என ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மாநாட்டில் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset