நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

14 நாள்களுக்கு பிறகு 20 டிரக் நிவாரண பொருள் செல்ல எல்லையை திறந்தது இஸ்ரேல்

ரஃபா:

எகிப்து எல்லையை சனிக்கிழமை இஸ்ரேல் திறந்ததையடுத்து, போர் தொடங்கி 14 நாள்களுக்குப் பிறகு காசாவுக்குள் 20 டிரக்குகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன.

எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து முதல் முறையாக 2 அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்குப் பதிலாக காசாவுக்குள் 20 டிரக்குகள் மட்டும் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.

எகிப்து எல்லையில் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் கொண்ட 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் காத்திருந்தபோதிலும், வெறும் 20 டிரக்குகள் மட்டும் காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்த டிரக்குகளில் உள்ள 44,000 குடிநீர் பாட்டில்கள் 22,000 மக்களுக்கு ஒருநாள் பயன்பாட்டுக்கு மட்டுமே வரும் என்பதால், பெருமளவில் நிவாரணப் பொருள்கள் காசாவுக்குள் உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

24 மணி நேரமும் நிவாரண பொருகள் செல்லும் வகையில் ரஃபா எல்லையை திறக்க வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு தினசரி 400 டிரக் நிவாரணப் பொருள்கள்  காசாவுக்குள் சென்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset