நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சிறிய மொழிக்கு உலகின் உயரமான கௌரவம்: இலக்கியத்துக்கான 2023ஆம் ஆண்டின் நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு நார்வேஜிய மண்ணுக்கு 95 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

யோண் லோவ் போசே (64 வயது)என்ற படைப்பாளிக்கு அளிக்கப்படும் நோபல் பரிசு நார்வேஜிய மொழிக்குத் தரப்பட்டுள்ளது என்பதைவிட முக்கியமானது ஒரு சிறுபான்மை மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதாகும்.

போசே எழுதும் மொழி நவ நார்வேஜியன் (New Norwegian)   எனப்படும் சிறிய மொழி. நார்வே நாட்டு அலுவல் மொழிகள் இரண்டில் ஒன்றான நினோர்ஸ்க்  தான் போசே கையாளும் மொழி.

இது அந்நாட்டின் 10-முதல்15 விழுக்காடு மக்கள் மட்டுமே பேசுகிற மொழி.அந்நாட்டின் மேற்குப்பகுதி கிராமத்து மக்களின் தாய் மொழி நினோர்ஸ்க்.

ஒரு கிதாரை எடுத்துக்கொண்டு சங்கீத வெறியனாக அலைந்த இளமைக் காலம்;பின்னர் நாவலாசிரியராகப் பரிணாமம்; சென்ற நூற்றாண்டின் தொண்ணூறுகளில்  நாடகாசிரியராக வடிவெடுத்தல். முதலில் நாடக உலகம் அவரை புறக்கணித்தது.

பின்னர் ஷேக்ஸ்பியர்,இப்சன் வரிசையில் காலம் கொண்டு போய் நிறுத்தியது.இ

வருடைய மாபெரும் படைப்பு தொடர் நாவல் வரிசையான septology.

மற்றொரு சிறப்பு 1750 பக்கங்கள் கொண்ட ஒரே வரியினால் அமைந்த நாவல் என்று சொல்லப்படுகிறது.

விரிவான விளக்கங்களை மேலதிகம்  கற்றவர் கூற முடியும்.

ஒரு சிறிய மொழிக்கு உலகின் உயரமான கௌரவம் தேடித் தந்தமையே என்னைப் பரவசப்படுத்தியது.

- சிற்பி பாலசுப்ரமணியம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset