
செய்திகள் மலேசியா
குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ கோபியோ ஏற்பாட்டில் நிதி திரட்டும் நிகழ்வு
கோலாலம்பூர் :
நாட்டில் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் வகையில் கோபியோ எனப்படும் மலேசிய இந்திய வம்சாவளி அமைப்பு மிகப்பெரிய அளவில் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
வரும் டிசம்பர் 2ஆம் தேதி உலக வாணிப மையம் மெர்டேக்கா அரங்கில் இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோபியோ தலைவர் எஸ். குணசேகரன் தெரிவித்தார்.
குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் கோபியோ பல ஆண்டுகளாக தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
ஸ்மார்ட் டிவி, புரொஜெக்டர்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட முக்கிய கருவிகளை வாங்கி தருவதற்காக இந்த விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாணவர்களின் கல்விப் பயணத்தை உயர்த்துவதற்கு கோபியோ செயல்படுகிறது.
கடந்த காலங்களில் பல தமிழ்ப்பள்ளிகளுக்கும் உதவிகரம் நீட்டியிருக்கிறோம். அடுத்த ஆண்டும் பல பள்ளிகளுக்கு உதவி கரம் நீட்டுவோம் என்று அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் நடத்தப்படும் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு தலைமையேற்று ஆதரவு தரும்படி மனிதவள அமைச்சர் சிவக்குமாருக்கு இன்று கோபியோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
கோபியோ தலைவர் எஸ். குணசேகரன், கோபியோ அனைத்துலகச் செயலாளர் செயலாளர் ரவீந்திரன், மலேசிய கோபியோ சசிதரன், சிவா ஆகியோர் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am