நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

2035-க்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம்: பிரதமர் மோடி

புது டெல்லி:

2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

மனிதர்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ. தொலைவுக்கு அனுப்பி, பின்னர் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் வரும் 21-ஆம் தேதி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பிரதமரிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விளக்கினார்.

அப்போது இஸ்ரோவுக்கு பிரதமர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தையும், 2040ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதையும் இலக்குகளாக கொள்ள வேண்டும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset