நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பைடனுடனான சந்திப்பை ஜோர்டான், எகிப்து, பாலஸ்தீன அதிபர்கள் ரத்து

ஜெருசலேம்:

காஸா மருத்துவமனை மீது இஸ்ரோல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடான சந்திப்பை ஜோர்டான், எகிப்து பாலஸ்தீன அதிபர்கள் ரத்து செய்துள்ளனர்.

வடக்கு காஸா பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க தெற்கு காஸாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தெற்கு காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தைகள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை  உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3,500 கடந்துள்ளது. மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் போருக்கு முதல் நாளில் இருந்த ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவும், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு ஜோ பைடன் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பின்பு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி, பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் ஆகியோரை சந்திக்க பைடன் திட்டமிட்டிருந்தார்.

இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளதால் காஸா பகுதியில் சிக்கி உள்ள மக்களை அகதிகளாக அரபு நாடுகள் ஏற்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்த இருந்ததாக கூறப்படுகிறது.

ஜோ பைடனின் வருகைக்கு முன்பு இஸ்ரேல் மருத்துவமனை மீது குண்டு வீசி அப்பாவி மக்களை  கொடூர கொலை செய்த சம்பவம் நடைபெற்றது. இதற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பைடனுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset